வியாழன், 25 ஜூன், 2009
ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்
ஐ.நா. தோன்றுவதற்கு முன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்.
°காட்லாந்து : 1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களி லிருந்து தற்காத்துக் கொள்ள °காட் லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகட னத்தைத் தொடர்ந்து இரு நாடு களிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணை யாளராக செயற்பட்டு பேச்சுவாத்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து °காட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.
லத்தின் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள் : 1800 களின் தொடக்கத்தில் பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்க புரட்சிக் கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன.
1810 மே 25 ஆம் நாளன்று °பெயி னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சு படையணிகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங் கத்தை அமைத்தது. அதனுடன் இணைந்து கொள்ளுமாறு இதர °பெயின் காலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.
அப்போதைய °பெயின் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.
1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாளன்று அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண் டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.
1822 ஆம் ஆண்டு போர்ச்சுகலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது.
1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.
1828 ஆம் ஆண்டு அர்ஜென்டினா - பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் ஊருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது.
மத்திய அமெரிக்க நாடுகள் : ஐக்கிய அமெரிக்க நாடுகள் உரு வானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டது. இக்கூட்டமைப்பில் கோ°டா, ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுரா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து,
1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறி வித்தது.
அதனைத் தொடர்ந்து ஹோண்டு ரா° மற்றும் கோ°ரா, ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.
இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.
எஸ்தோனியா: எஸ்தோனியா தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந் திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசியப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரசியப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ருசிய இராணுவத்துக்கு எதிராக ஜெர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக்கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனியா” தேயி இனத்தின் சுய நிர்ணய உரிமையை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர், சுதந்திரத்தக்கான போரை 2 ஆண்டுகாலம் எஸ்தோனியா நடத்தி யது. 1920 ஆம் ஆண்டு ருசியாவுக்கு எதிரான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990களின் இறுதியில் சோவியத் ருசியா உடைந்து நொறுக்கியபோது தனது சுதந்திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனியா வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம் தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம் பெற்றுள்ளது.
பின்லாந்து: எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ருசியப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளன்று பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாக அமைப்பும் ஜெர்மனியும் °காண்டிநேவியன் நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தன.
கினியா பிசாவு : மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசிய காலனி நாடாக இருந்தது கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர்தான். போர்த்துகீசியர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுத போராட்டக் குழு உருவானது. அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.
1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும் பகுதிகள் வந்தன.
அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் ஒருதலைபட்சமான சுதந்திரப் பிர கடனத்தை அந்நாடு வெளியிட்டது.
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93க்கு 7 என்ற வாக்குகளில் அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப் பட்டது.
ஹைட்டி: பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த ஹைட்டியானது 1805 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாளன்று தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது ஹைட்டி.
ஆனால், 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹைட்டியை ஆக்கிரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா. அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.
அமெரிக்கா : 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாளன்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது. வடஅமெரிக்காவில் பிரிட் டனுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 காலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப் பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒருமித்த பிரகடனம்” என்பதாகும்.
இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கிய வர்கள், தோம° ஜெப்பர்சன், ஜோன் ஆதம்°, பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.
இந்தோனேசியா : இந்தோனேசி யாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து, அங்கே தனது காலனி நாடாக டச்சு நாட்டை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக் குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டே நாள்களில் 1945 ஆம் ஆண்டு ஆக°டு மாதம் இந்தோனேசியாவின் தேசிய வாதத் தலைவர் சுகர்னோ பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.
அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இதே காலகட்டத்தில் நெதர் லாந்து மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல் கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தோ னேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை நெதர்லாந்து அங்கீகரித்தது.
ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:
கொரியா
ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரி° அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லிதுவேனியா
ஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.
பிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்
1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று °பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் °பெயினும் இதனை ஏற்க மறுத்தன.
1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் °பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் °பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.
1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்° குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.
1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைபிடித்து வருகின்றனர்.
ஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்
1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோ° உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆக°ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.
இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.
1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.
1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.
அதே ஆண்டுகளில் ருசியாவின் °டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.
கொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.
இஸ்ரேல்
1947 ஆம் ஆண்டு பால°தீனை இரண்டாகப் பிரித்து இ°ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இ°ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இ°ரேலை அங்கீகரித்தன.
பாலஸ்தீன்
1988 ஆம் ஆண்டு பால°தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பால°தீன தேசிய சபையானது பால°தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பால°தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.
1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.
இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிர°, சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.
சோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.
பெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.
2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.
அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.
எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.
சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர். (தொடரும்)
புதன், 15 ஏப்ரல், 2009
காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!
செவ்வாய், 3 மார்ச், 2009
விலங்கிடுவது கைக்கா? வாய்க்கா?
தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.)
உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல் களேபரத்தில் காணாமல் போய்விடும்.
ஆயினும் ஈழத்தின்பால் உண்மையான பற்றுள்ள சில தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தையும் மீறி இலங்கை விவகாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்களோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது.
காரணம், இத்தேர்தலில் இலங்கை விவகாரம் நிச்சயம் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆளும் தி.மு.க.வும் காங்கிரஸும் நன்கு உணர்ந்துள்ளன. அதன் எதிரொலியாகத் தான் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட வலைவீசப் பார்க்கிறது காங்கிரஸ்.
உலகத் தமிழர்களுக்கே தான் மட்டும் தான் நம்பகமான ஒரே தலைவர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க.வோ, ஈழப் பிரச்னையால் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் உள்ளது.
எனவே, இலங்கை விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு போகக் கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. அதற்காக அறிவிக்கப்படாத கைது நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வரும் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த தமிழக அரசு, அதன் பிறகு வைகோவையும் கைது செய்து உள்ளே தள்ளியது. (அவர் தற்போது பிணைய விடுதலையில் வெளியே வந்துவிட்டார் என்பது வேறு விஷயம்) வைகோ மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயலாம் என்றே கூறப்படுகிறது.
இத்துடன் நிற்கவில்லை. திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாக, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியையும் கைது செய்து 'உள்ளே' வைத்துவிட்டது தமிழக அரசு.
தமிழக காவல்துறையினர் விலங்கிடுவது தலைவர்களின் கைகளுக்கா? அல்லது அவர்களின் வாய்க்கா? அடுத்த கைது யார்? பழ. நெடுமாறனா? அல்லது தொல் திருமாவளவனா?
சனி, 21 பிப்ரவரி, 2009
யாரா இருக்கும் அது?
’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை
- தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன.பல தொழிலாளர்கள் வேலை இழப்பு.
- உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு.
- வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதி.
- டாஸ்மாக் மதுக்கடைகளினால் பல குடும்பங்கள் சீரழிவு.
- அரசு பேருந்துகளில் மறைமுக விலையேற்றம்.
- ராஜா என்கிற தமிழக அமைச்சர், ஈரோட்டில் நிலமோசடி வழக்கில் ஈடுப்பட்டார், என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு.
- திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த மக்கள், முறையான கூலி கேட்டு மறியல் செய்த போது அவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு.
- ஈழத் தமிழர்களை கொலை செய்யும், சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி. தமிழர்கள் தீக்குளிப்பு. தமிழகம் கொந்தளிப்பு. தமிழகஅரசின் மெத்தனம்.
- ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரானப் போரை நிறுத்து’ என்ற பொதுநோக்கில் தங்கள் நலன்களைப் புறம் தள்ளி தமிழர்களுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தமிழக போலிசாரின் கொலைவெறித் தாக்குதல். படுகாயமுற்ற வழக்கறிஞர்கள் மீதே, கொலை முயற்சி வழக்கு.
ஆமாம், யாரா இருக்கும் அது?
அதாங்க, முதல்வர் சொல்லி இருக்கிறாரே, ‘தமிழக அரசுக்கு எதிராக சதி பண்றாங்க’ என்று. அதுதான் யாருன்னு தெரியிலையே?
-வே. மதிமாறன்
வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது...
‘ஸ்ரீராமபிரான் ஆண்ட அயோத்தியில், பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு ராமனின அரண்மனையை நோக்கிப் போனான்.
திங்கள், 16 பிப்ரவரி, 2009
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த “வீரத் தமிழ் மகன்” முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.
“தேனிசை” செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,
இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.
தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,
ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன் ஆற்றிய உரையில்,
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.
ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.
தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று கேட்டுக் கொண்டார்.
திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,
எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.
இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.
அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக “விண்” தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சு
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய காரை எரித்தவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் அய்யா தா.பாண்டியன் அவர்களின் காரை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?
நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயக வாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமாரும் ஜனநாயக வாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று.
முத்துக்குமார் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் காரையும், தா.பாண்டியன் காரையும் எரித்த காங்கிரஸ்காரன் தேசியவாதி.
தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?
இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.
புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு.
7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.
உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.
எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.
நன்றி. நக்கீரன் இணையம்
http://www.nakkheeran.in