செவ்வாய், 1 ஜூலை, 2008

இயக்கம்

ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தாடவிக்கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மையும் இருக்கிற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல்திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாக திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும்,பண்க்காரர்க ளெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்விற்கே எற்ப்பட்டது என்று கருதிக்கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்.மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்விய்க்கத்தை ஒழிக்க யாராலும் முடியாதென்பதே நமது உறுதி.
-தந்தைபெரியார்

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யொழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
- தந்தைபெரியார்

திங்கள், 30 ஜூன், 2008

மாறுதலால் எதிர்கால உலகம்...

சகல சவுகரியங்களுமுள்ள இப் பரந்த உலகில் உணவுக்காகஎன்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாக வேண்டும்? என்கின்றபிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்த சிக்கலான பிரச்சினைகளாக இருந்தன. இன்று தெளிவாக்கப்பட்டும் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்த போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொது வாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும் படியான புதிய உலகத்தை உண்டாக்க்கித்தான் தீரும் அப்போதுதான் பணம்,காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரசு ஆட்சி இருக்காது; கடினமான் உழைப்பு என்பது இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்தன்மை இருக்காது; ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இருக்காது; பெண்களுக்கு காவல் கட்டுப்பாடு பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.

ஞாயிறு, 29 ஜூன், 2008

கடவுள் என்றால் என்ன?

நாங்கள் வந்து இந்தப்பிரச்சினையிலே கடவுளைக் கும்பிடாதீர்கள்
என்று சொல்லவில்லை! நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இந்தப்பிரச்சினையிலே கடவுளை கும்பிடாதீர் என்றுசொல்லவில்லை கடவுள் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒன்றுமேஇல்லாமல் நினைத்ததை எல்லாம் கடவுள் என்றால் என்ன அர்த்தம்? பல்லிகடவுள், பாம்புகடவுள்,அரசமரம் கடவுள்,வேப்பமரம் கடவுள்,ஓணான்கடவுள்,நாய்கடவுள்,நினைத்ததை எல்லாம் கடவுள் என்றால்,இது பைத்தியகாரச்சங்கதியா? கடவுள்சங்கதியா? இந்தப் பைத்தியகாரத்தனத்துக்குநமது பணம்,நமதுநேரம்,நமதுசக்தி எவ்வளவு செலவாகிறது?இவ்வளவுசெய்தும் நமக்கு தேவடியாள் மகன் என்ற பட்டம் அல்லவா கிடைக்கிறது.
தந்தைபெரியார். விடுதலை-19.12.1973

புதன், 25 ஜூன், 2008

டெல்லி ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 6 - டெல்லியில் இந்திய அரசே இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் இந்திய ராணுவ அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் மக்களிடம் இருந்து பெற்ப்பட்ட கையெழுத்து படிவங்களை வழங்கி இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவிகளோ? பயிற்சியோ? தரக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

பயம்

ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு......
''யாமிருக்க பயமேன்"
-புதுவை தமிழ் நெஞ்சன்

குமுறல்

செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?

-காசி ஆனந்தன்