சனி, 9 ஆகஸ்ட், 2008

பிள்ளை குட்டித் தொல்லை ஒழிய

சொத்தெல்லாம் [பொதுவழி]சர்க்காருடையது என்று ஆக்கப்பட்டு விட்டால் பிள்ளை குட்டி வேண்டும் என்ற ஆசையும்,அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையும் மனிதனுக்கு வரவே வராது. தனி உடமை ஒழிந்துவிட்டால் வாரிசுரிமை என்கின்ற பிரச்சினைக்கே இடமில்லை. புதையல் எடுக்கும் பொருள் எப்படி அரசாங்கத்திற்குச் சொந்தமோ அது போலவே குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும் அரசங்கத்தின் சொந்த சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும் பிள்ளைகளை காக்கவேண்டுமே-படிப்பு கொடுக்கவேண்டுமே-வேலை தேடித்தரவேண்டுமே என்ற கவலை எல்லாம் பெற்றோர்களுக்கு அறவே கூடாது அவற்றை எல்லாம் அரசாங்கமே பார்த்துக்கொள்ளவெண்டும்.
['பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து]

வலைப்பதிவு காப்பகம்