1. மன உறுதியும் தெளிவான சித்தனையும் பெற்றவன்.
2. அஞ்சா நெஞ்சுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப் பணிகளைச் செய்வோன்.
3. எங்கும், எதிலும், யாரிடத்தும் உண்மையை ஆராய்ந்து அறிவோன்.
4. சிந்தனையே எல்லா ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோன்.
5. பெண்ணினத்துக்குச் சம உரிமை வழங்குபவன்.
6. எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னிறுத்தி இயங்குபவன்.
7. அடக்கமும் அமைதியும் உடையவனாய்த் தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோன்.
8. துன்பம், தடை, சிக்கல், ஏக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவன்.
9. மனித உடல் பல சிக்கல்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்திற்கொண்டு, உடலை ஓம்பி, காலம் வரும்போது மாள அஞ்சாதவன்.
10. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுவோன்.
11. கடவுள், மதம், சாதி, முதலிய பொய்மைகளினின்றும், விடுபடுவதுடன், இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலிய எல்லைக்கு அப்பாற்பட்டு இயங்குபவன்.
12. மனிதனைச் சமநோக்குடன் அணுகி மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத் தூய்மையும், மிக்கவனாய், ஊக்கமுடன் உழைப்போன்.
13. தனக்காக மட்டும் வாழாது, தான் எற்றுக்கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் பிறருக்காக, சமுதாய முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவன்.