வியாழன், 9 ஜனவரி, 2014

திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்
நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் ஒரு பெரியார் பெருந்தொண்டர். 89 வயதில் அவரது மறைவு சுயமரியாதைக் கொள்கை உலகுக்கு ஒரு பெரும் இழப் பாகும். தொடக்கத்தில் திருவாரூரில் காங்கிரஸ் காரராக இருந்தாலும், பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்கள் சிலவற்றிற்கு கதை, வச னம் எழுதினார். அவற்றுள் ரத்தக் கண்ணீர், இராமாயணம் ஆகிய நடிகவேளின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை (பின்னது பெரிதும் தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழு தப்பட்டது). அவர் திராவிடர் கழகத்தின் பல போராட்டங் களிலும் கலந்து கொண்டு சிறையேகியவர்; கழகத்தின் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற பிறகு, கருத்து வேறுபாடுகளால் அவரால் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இயலாமல், வெளியேற்றப்பட்ட வர்களுடன் இருந்தார். என்றாலும், அவரது மாறாத சுய மரி யாதை, பகுத்தறிவுக் கொள்கைக்காக (அவர் நம்மை எவ்வளவு விமர்சித்தபோதிலும்) அவருக்கு வீர வணக்கத் தைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், வாழ்விணையர், மகள், மகன் மற்றும் அனைவருக்கும் இரங்கலைத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை,
5.1.2014
கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்



Read more: http://www.viduthalai.in/page1/73237.html#ixzz2ppnY3I5M

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்திற்குச் சென்று, மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் இணையர், மகள்கள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தோழர் முரளி, விடுதலை மேலாளர் ப.சீதாராமன், மந்தைவெளிப் பகுதி இளைஞரணிச் செயலாளர் முகிலன், இரா.பிரபாகரன் மற்றும் தோழர்களும் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.



Read more: http://www.viduthalai.in/page1/73237.html#ixzz2ppnY3I5M

திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்

திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரும் தந்தை பெரியாரின் கொள்கை காப்பாளருமான அய்யா கு.திருவாரூர் தங்கராசு அவர்கள் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மறைவுற்றார். அவரது மறைவிற்கு பல்வேறு இயக்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



1.      தோழர் நல்லகன்னு (இந்திய கம்யுனிஸ்ட்)
2.      ஆனுர். ஜெகதீசன் (தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்)
3.      தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)
4.      டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்)
5.      ஜெயக்குமார் ( அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர்)
6.      வழக்கறிஞர் செ.துரைசாமி (துணை தலைவர் தந்தை பெரியார் தி.க)
7.      கோவை கு.ராமகிருட்டிணன் (பொதுச்செயலாளர் தந்தை பெரியார் தி.க)
8.      சிற்பி ராசன் (கொள்கை பரப்புச் செயலாளர் தந்தை பெரியார் தி.க)
9.      திருச்சி வே.ஆனைமுத்து
10.   வே.மதிமாறன் (எழுத்தாளர்)+++++
11.  க.திருநாவுக்கரசு (திராவிடர் இயக்க எழுத்தாளர்)
12.  விடுதலை ராசேந்திரன் (திராவிடர் விடுதலைக் கழகம்)
13.  கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
14.  ம.நடராசன் (புதிய பார்வை ஆசிரியர்)
15.  திருச்சி கே.செளந்தர்ராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
16.  பெ.மணியரசன் (தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி)ப
17.  பு.சி.இளங்கோவன் ( பேராசிரியர்)
18.  கல்வியியளார் பேராசிரியர் நாகநாதன்
19.  மருத்துவர் எழிழன்
20.  சு.தமிழ்ச்செல்வன் (பேரன்)