பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 130-வது பிறந்த நாள் விழாவை இருசக்கர வாகன ஊர்வலம்,கொடியேற்றுவிழா,பொதுக்கூட்டம் என இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது 21-9-2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் திருப்பூர் வெள்ளியங்காட்டிலிருந்து கொடியேற்றிவைத்து இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. தென்னம்பாளையம்,டிகேடி,பழையபேருந்துநிலையம்,இரயில்நிலையம்,புஷ்பாதியேட்டர், சாமுண்டிபுரம், அநுப்பர்பாளையம்,புதியபேருந்துநிலையம்,கொங்குமெயின்ரோடு,மங்கலம்ரோடு, முருகம்பாளையம், உட்பட 45 இடங்களில் ஊர்வலம் சென்று கொடியேற்றி வைத்து இறுதியாக வீரபாண்டி பிரிவில் முடிவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கோபி.வேலுச்சாமி,கா.சு.நாகராஜ்,சூலூர் வீரமணி, தியாகு,கனல்மதி உட்பட முன்னணித்தோழர்கள் பேசினார்கள், இந்நிகழ்ச்சிகளுக்கு பெரியார்திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சு.துரைசாமி தலைமை தாங்கினார்.
இதேபோல் 22-9-2008 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு இராயபுரம் பகுதியில் பெரியார்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராயபுரம் ராசன் தலைமையில் நடைபெற்றது. பரிமளராசன்,கருணாநிதி, நீதிராசன்,கூரியர்பிரகாசு,ஆ.ரமேசு ஆகியோர் முன்னிலை வகிக்க அர.கிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மா.உமாபதி,ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,இந்நிகழ்ச்சியில் மேலும் இல.அங்ககுமார்,சு.துரைசாமி,க.அகிலன்,முகிலரசு,சரவணமூர்த்தி,ஞா.கார்த்திகேயன்,திணேஷ்,மூர்த்தி,லாவண்யாஆகியோர் பேசினார்கள்.மன்னைதங்கம்,திருப்பூர்தியாகு ஆகியோர் பாடல்கள்பாட பரமேசுவரி நன்றிகூறினார்.
செவ்வாய், 23 செப்டம்பர், 2008
பெரியார் பிறந்த நாள் விழா
சனி, 20 செப்டம்பர், 2008
பெரியார் தனது எழுத்துகளை வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை! - கோவை இராமகிருட்டிணன்
கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:
1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17 வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.
2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டு விட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத்துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.
5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.
6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்து களை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.
7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008
வீரமணிக்கோ, அறக்கட்டளைக்கோ பதிப்புரிமை எதையும் பெரியார் வழங்கவில்லை! - நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி

சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வருவதற்கு முன்பே குடிஅரசு நின்று போய் விட்டது!
பெரியார் நடத்திய பத்திரிகைகள் எல்லாமும் வீரமணியிடம் இல்லை!
பெரியார் எவருக்கும் காப்புரிமை வழங்கவில்லை!
மாபெரும் புரட்சியாளர் பெரியாரின் சிந்தனைகளை வர்த்தகமாக்கக் கூடாது!
உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்த மனு
பெரியார் திராவிடர் கழகம் - குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு தடை கோரியும், பெரியார் திராவிடர் கழகம் தங்களுக்கு ரூ।15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி।வீரமணி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு மனுவுக்கு பதிலளித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபாலன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களுக்கு பதில் தருவதற்கு கி.வீரமணி தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு 15 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வழக்கறிஞர் துரைசாமியும், பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சார்பில் பெண் வழக்கறிஞர் கிளாடிஸ் டேனியல் அவர்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு மனுக்களிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்:
வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
முதலில் மனுதாரர் கி। வீரமணி பெரியாரின் தொண்டர் என்றும், நாத்திகர் என்றும், மதத்தில் நம்பிக்கையற்றவர் என்றும் கூறுகிறார்। ஆனால், அவர் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஒரு ‘இந்து’ என்று கூறியிருக்கிறார்। இதிலிருந்தே அவர் உண்மையான பெரியார் தொண்டர் இல்லை என்பது தெரிகிறது। அதன் காரணமாகவே பெரியார் இறக்கும் வரை அறக்கட்டளையில் அவரை உறுப்பினராக நியமிக்கவில்லை।
பெரியாரின் எழுத்துக்கள் தனது நிறுவனத்துக்கு மட்டுமே உரிமையுடையது என்று கி।வீரமணி கோருவதற்கு, சட்டப்படி உரிமை கிடையாது. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் - 19 வது பிரிவின்படி பதிப்புரிமை கோரும் ஒருவர், எழுத்தாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பெரியார், அப்படி எழுத்துப்பூர்வமாக எழுதித் தரவில்லை. வீரமணி செயலாளராக உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற “சொசைட்டி”யின் விதிகள் (22வது விதி) பெரியார் “வாங்கிய” சொத்துகளைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றனவே தவிர, படைப்பாற்றலால் உருவாக்கப்படும் பேச்சு எழுத்துகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரரின் அறக்கட்டளை விதிகளே பெரியார் நூல்களுக்கு உரிமை கோராத போது தனது நிறுவனத்துக்கு உரிமையில்லாத ஒன்றின் மீது மனுதாரர் இடைக்கால தடை கோர முடியாது.
பெரியார் தனது எழுத்துகளும், பேச்சுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பிய தலைவரே தவிர, அதை வைத்து பொருள் ஈட்டும் எண்ணம் கொண்டவர் அல்ல। தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - பரப்புங்கள் என்றும், தனது கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் பெரியார் எழுதியும், பேசியும் வந்துள்ளார்। அத்துடன், பெரியார் ஒரு தத்துவத் தலைவர்। தனது தத்துவங்களை மக்களிடம் பொதுக் கூட்டங்கள் வழியாக பரப்பியவர். பொதுக் கூட்டங்கள் இல்லாத போது, தமக்கு சரி என்று தோன்றிய சிந்தனைகளை ‘குடி அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’ போன்ற பத்திரிகைகளில் எழுதினார். சமூகத்தை மாற்றியமைப்பதே அவரது தத்துவத்தின் முழுமையான நோக்கம். எனவே மக்களுக்கான பெரியாரின் தத்துவங்களுக்கு இந்த பூமிப் பந்தில் தனியுரிமை கோரும் உரிமை எவருக்கும் கிடையாது. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே, தனது தத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று பெரியார் ஒரு போதும் கூறவில்லை. அதற்கான உரிமையுள்ளவர் மனுதாரர் மட்டுமே என்று பெரியார் தனது அறக்கட்டளை விதிகளிலும் குறிப்பிட வில்லை. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதற்கு பெரியாரைப் பின்பற்றும் தொண்டர்களுக்குக்கூட உரிமை உண்டு.
எல்லோருக்கும் பொதுவானவர் பெரியார்। அவர் தேசத்துக்கே பொதுவானவர்। மனுதாரரும், அவரது அறக்கட்டளைக்கும் மட்டுமே சொந்தமானவர் அல்ல। அவரது எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாக்கும் உரிமை - ஒவ்வொரு பெரியார் தொண்டருக்கும் உண்டு। இதில் மக்களை மனுதாரர் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, பெரியாரின் சிந்தனைகளை காலவட்டத்துக்குள்ளும் அடக்கிட முடியாது. அவை காலங்களைக் கடந்து நிற்பவை. மனித குலம் நீடிக்கும் வரை அவரது சிந்தனைகளை வெளியிடவும், பரப்பவும் பெரியார் தொண்டர்களுக்கு உரிமை உண்டு. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே பெரியாரைப் பின்பற்றுபவர் அல்ல; ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பெரியாரைப் பின்பற்றுவோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உரிமை உண்டு.
பெரியார் தனது வாழ்நாளின் மிக கடைசி காலத்தில்தான், தானும் 12 பேருடனும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நிறுவினார். அதுகூட தனது தனிப்பட்ட அசையா சொத்துகள் விண்ணப்பதாரரான கி.வீரமணி போன்ற எந்த தனிப்பட்ட நபர்களுக்கும் போய் சேர்ந்து விடாமல், பரவலாக மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினார்.பெரியார் பதிப்புரிமையை தன்னிடம் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளார் என்ற சான்று ஆதாரத்தைக் காட்டாதவரை, விண்ணப்பதாரர், சட்டப்பூர்வமாக பதிப்புரிமை கோர முடியாது। பதிப்புரிமை சட்டத்தின் 19வது பிரிவு, இதைத் தான் கூறுகிறது.
பெரியார் 1952 ஆம் ஆண்டு உருவாக்கிய அறக்கட்டளையின் வழியாக பெரியார் தனது அனைத்து எழுத்துகளையும், அறக்கட்டளைக்கு உரிமையாக்கியுள்ளார் என்று மனுதாரர் கூறுவது உண்மையல்ல। முதலில் அந்த அறக்கட்டளையை பெரியார் மட்டுமே தொடங்கவில்லை. அறக்கட்டளைகளின் 13 உறுப்பினர்களில் பெரியார் இருக்கிறார். அதில் பெரியாரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே வே। ஆனைமுத்து - பெரியார், எழுத்து பேச்சுகளைத் தலைப்புவாரியாக ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’களிலிருந்து 3 தொகுதிகளாக தொகுத்து, அதை பெரியார் மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், மனுதாரரும் (கி.வீரமணி) பங்கேற்றார். இவை தவிர, பெரியாருடைய கருத்துகளை பல்வேறு பதிப்பகங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன. மனுதாரர்கூட இப்படி வெளியிட்டுள்ளார். உதாரணத்துக்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறோம்.
1। ‘தந்தை பெரியார் இறுதி சொற்பொழிவு’ வெளியீடு : மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி; 1993।
2। ‘தந்தை பெரியாரின் இறுதி சொற்பொழிவு நாத்திகம்’ வெளியீடு; 2002.
3। பெரியாரின் “அபாய சங்கு” வெளியீடு: பெரியார் அச்சிடுவோர் வெளியீட்டு குழுமம்; 1983।
4। ‘புதியதோர் உலகு செய்வோம்’ வெளியீடு: அறிவுப் பண்ணை.
5। பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” முனைவர் கே.எம்.ராமாத்தாள் ஆங்கில மொழியாக்கம் வெளியீடு: தமிழ் மண் பதிப்பகம், 2007.
6। பெரியாரின் “கல்வி சிந்தனைகள்” வெளியீடு: இந்திய மாணவர் சங்கம்-2007.
7। பெரியார் ஈ.வெ.ரா.வின் “வாழ்க்கை துணை நலம்”; வெளியீடு: கோட்டையூர் ரெங்கம்மாள் மற்றும் ஏ.எல். சிதம்பரம் (குறிப்பு: கி.வீரமணியின் திருமணத்தின்போது வழங்கப்பட்டது.)
8। “பகுத்தறிவாளர் மன்ற தொடக்க விழாவில் பெரியார் பேருரை” வெளியீடு: கோவை அண்ணா சிந்தனையாளர் பேரவை; 1971.
9। பெரியார் எழுதிய ‘கடவுளர் கதைகள்’; வெளியீடு: சிந்தாமணி பதிப்பகம், 2003.
10। “இஸ்லாம் பற்றி பெரியார்”; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. அறிமுக உரை எழுதியவர் ஜி.அலோசியஸ்; வெளியீடு: கிரிட்டிக்கல் கியுஸ்ட் - 2004.
11। ‘மதமும் - மனிதனும்’ - பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் 24.11.1964-ல் பேசியது; வெளியீடு: பகுத்தறிவாளர் கழகம்; 1993.
12। ‘குடிஅரசு’ 1925 முதல் தொகுதி; குடிஅரசு - 1926 (இரு தொகுதிகள்) வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம் - 2003.
13। “சிந்தனே வாய்ச்சரிக்கதே” (கன்னடத்தில் - பெரியாரின் பேச்சு மொழி பெயர்ப்பு) வெளியீடு: சுவபிமான காலுவலி கருநாடகா-2006.
14। ‘இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது’ - பெரியாரின் குடந்தைப் பேருரை. வெளியீடு: பெரியாரியல் குடும்பங்களின் நட்புறவு சங்கம்-1984.
15। ‘இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1958.
16। ‘மதமும் - அரசியலும்’ பெரியார் ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1960.
17. ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்’-ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு-1961
18. தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு) வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1968.
19. கிராம சீர்திருத்தம் - பெரியார் சொற்பொழிவு - சிந்தனை பண்ணை.
1925 இல் பெரியார் தொடங்கிய குடிஅரசுக்கும் 1952 இல் பெரியார் நிறுவிய அறக்கட்டளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பே ‘குடிஅரசு’ நின்று போய்விட்டது.‘குடிஅரசு’ பத்திரிகைக்கும், ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும், பலர், பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அதன் விவரம்:
தேதி பத்திரிகை ஆசிரியர் அச்சிடுவோர்/வெளியிடுவோர்
2।5।1925 குடிஅரசு ஈ।வெ।ராமசாமி நாயக்கர் கே।ஏ. அப்பையாமற்றும் தங்கப் பெருமாள் பிள்ளை ஈரோடு சுயராஜ்ய பிரஸ்
26।7।1925 ” ஈ।வெ।ராமசாமி நாயக்கர் கே।ஏ। அப்பையாஈரோடுசுயராஜ்யபிரஸ்
27।9।1925 குடி அரசு ஈ।வெ।ராமசாமி நாயக்கர் ஈ।வெ।ராமசாமி நாயக்கர் ஈரோடு டைமண்ட் பிரஸ்
18।4।1926 ” ஈ।வெ।ராமசாமி நாயக்கர் சா।ராமசாமி நாயக்கர் ஈரோடு ஸ்டார் பிரஸ்9।1।1927 ” ஈ।வெ।ராமசாமி நாயக்கர் ஈ।வெ।ரா।- நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
16.6.1929. ” ஈ।வெ।ராமசாமி ஜெ।எஸ்।கண்ணப்பர் திராவிடன் பிரஸ், சென்னை।
२।2।1930 ” ஈ।வெ।ராமசாமி நாயக்கர் ।ஈ।வெ।ரா। - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
29।11।1931 ” ஆசிரியர் பெயர் இல்லை ஈ।வெ।ரா। - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
26।11।1933 - புரட்சி - ஆசிரியர் பெயர் இல்லை எஸ்।ஆர்। கண்ணம்மாள் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
24।12।1933 ” ஈ।வெ।ராமசாமி நாயக்கர் எஸ்।ஆர்। கண்ணம்மாள் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
31।12।1933 ” ஈ।வெ।கிருஸ்ணசாமி எஸ்।ஆர்। கண்ணம்மாள் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்4।2।1934 ஈ।வெ।கிருஷ்ணசாமி ஈ।வெ।கிருஸ்ணசாமி ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
26।8।1934 பகுத்தறிவு ஈ।வெ।கிருஸ்ணசாமி ஈ।வெ।கிருஷ்ணசாமி ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
13।1।1935 குடிஅரசு ஈ।வெ।கிருஸ்ணசாமி ஈ।வெ।கிருஷ்ணசாமி ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
20।8।1939 ” அ। பொன்னம்பலனார் அ। பொன்னம்பலனார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
1।7।1944 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
3।11948 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
எனவே ‘குடிஅரசு’க்கு பலர் ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடு வோராகவும் இருந்து வந்துள்ளனர்। கடைசியாக ‘குடிஅரசு’க்கு ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்தவர் தமிழன் பதிப்பகத்தைச் சார்ந்த கரிவரதசாமி. கரிவரதசாமியோ, அவரது தமிழன் பதிப்பகத்தாரோ மனுதாரரான வீரமணிக்கு பதிப்புரிமை ஏதும் எழுதித் தரவில்லை. பதிப்பாளர்தான் பத்திரிகையின் உரிமையாளர் ஆவார். பெரியார் ‘குடிஅரசு’க்கு 27.9.1925-லிருந்து 18.11.1926 வரை மட்டுமே பதிப்பாளராக இருந்துள்ளார்.
இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் தமது அறக்கட்டளை சார்பாக நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மாநாடுகள் நடத்தப்படுவதாகவும் மனுதாரர் கூறுவது உண்மைக்கு மாறானது। அது நீதிமன்றத்தை திசை திருப்புவதாகும். மனுதாரரின் அறக்கட்டளை நல்ல வருமானம் தரக்கூடிய கல்வி நிறுவனங்களைத்தான் நடத்தி வருகிறது.பெரியாரின வாழ்க்கை வரலாறான ‘தமிழர் தலைவர்’ நூலை வெளியிடுவதற்கு 12.3.1949-ல் ‘ஸ்டார் பதிப்பகம்’ என்ற நிறுவனம் வெளியீட்டு உரிமை கோரி பெரியார் ஈ.வெ.ரா.வுடன் ஒப்பந்தம் போட முன் வந்ததாக மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆவணம் மோசடியானது. அந்த ஆவணத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கையெழுத்தும் இடம் பெறவில்லை. அந்த ஆவணத்தில்கூட அனைத்து உரிமைகளும் ‘குடிஅரசு’க்கே உரிமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குடிஅரசு’ பதிப்பகம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விடவில்லை. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ வந்த பிறகும்கூட - 1964 ஆம் ஆண்டு வரை ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் ‘குடிஅரசு’ கட்டுரைகளைத் தொகுக்க - தாம் ஒரு குழுவை நியமித்ததாக மனுதாரர் கூறுகிறார்। அப்படி, எந்தக் குழுவையும் மனுதாரர் நியமிக்கவில்லை. பெரியாரின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து சில ஆவணங்களை சேகரித்தனர். அப்படியே பார்த்தாலும், அதுகூட திராவிடர் கழகம் நியமித்த குழு தான், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் உரிமை கோர முடியாது. உண்மையில் மனுதாரரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகைகள் அத்தனையுமே முழுமையாக கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை கீழ்க்கண்டவர்களிட மிருந்து நாங்கள் தான் (கொளத்தூர் மணி) திரட்டினோம்.
சென்னை மறைமலை அடிகள் நூலகம், அண்ணா அறிவாலயத்திலுள்ள பேராசிரியர் ஆய்வக நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், கரந்தை தமிழ்ச் சுடர் நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூலகம், மதுரை முத்துமுருகன் நூலகம், நாகர்கோயில் ஆசிரியர் புவனன் நூலகம், மேட்டுப்பாளையம் உலக சிந்தனையாளர் நூலகம், ஈரோடு பேராசிரியர் மு।க. சுப்ரமணியம் நூலகம், குளித்தலை தமிழறிஞர் கா.சு. பிள்ளை நூலகம், மன்னார்குடி கோபால முதலியார் நூலகம், விருத்தாசலம் பல்லடம் மாணிக்க நுலகம், சைதை மாக்சிம் கார்க்கி நூலகம், சிங்கப்பூரிலுள்ள தேசிய நூலகம், தேசிய பல்கலைக்கழக நூலகம், ‘தமிழ் முரசு’ நூலகம், தேசிய ஆவணக் காப்பகம், சென்னை கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், காஞ்சிபுரம் கே.பி. ஞானசம்பந்தர், மதுரை சாலமன் பாப்பையா போன்ற பிரமுகர்கள் மற்றும் நூலகங்களிலிருந்து, பெரியாரின் நூல்கள் தேடி சேகரிக்கப்பட்டு, அவரது சிந்தனைகள் தொகுக்கப்பட்டன. பெரியாரின் ‘ஒரிஜினல்’ மூலப் பிரதிகள் தம்மிடம் இருப்பதாக மனுதாரர் கி.வீரமணி கூறுவது, பரிதாபத்துக்கு உரியது. ‘ஒரிஜினல்’ என்பதற்கான அர்த்தம்கூட அவருக்கு தெரியவில்லை. அச்சடிக்கப்பட்ட பிரதிகள் ‘ஒரிஜினல்களாக’ முடியாது. ‘ஒரிஜினல்’ என்பது கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்க வேண்டும். அப்படி, ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் எதுவும் மனுதாரரிடம் கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை பாதுகாத்து வைத்துள்ளோரிடமும் கிடையாது.
நாங்கள் இதுவரை ‘குடிஅரசு’ 3 தொகுதிகளை வெளியிட்டுள்ளதோடு, செப்டம்பர் 17-ம் தேதி 1927 முதல் 1949 வரையிலான ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்। கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி மேட்டூரில் நடந்த விழாவில் பெரியார் ‘பகுத்தறிவு’ வார ஏட்டை தொடங்கிய, நாளைக் கொண்டாடும் வகையில் அன்று நடந்த சிறப்பான விழாவில், ‘குடிஅரசு’ தொகுப்புகளும் வெளியிடப்பட்டு விட்டன. அப்படி வெளியிடப்பட்ட செய்தி தெரிந்த பிறகே, மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
பெரியார் மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்; ஒப்பற்ற போராட்ட வீரர்; தமிழக வரலாற்றை மாற்றியமைத்தவர்; அத்தகைய மாபெரும் தலைவரின் எழுத்துகளை ஒரு தனி மனிதர் கோரும் பதிப்புரிமைக்குள் முடக்கிவிடக் கூடாது। பெரியாரின் எழுத்துகள் - பதிப்புரிமை கோரக் கூடிய விற்பனைச் சொத்து அல்ல. பெரியாரின் சிந்தனைகள் விற்பனைப் பொருள் அல்ல; அவை சிந்தனையை விதைப்பவை.
மாபெரும் சிந்தனையாளர்களின் தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும் பதிப்புரிமை சட்டங்களை விரிவாக்க முடியாது। பெரியாரின் எழுத்துக்களை தேசத்தின் சொத்துக்களாகவே கருத வேண்டுமே தவிர, மனுதாரர் கோருவதுபோல், பெட்டிகளில் வைத்து பூட்டிவிடக் கூடாது. மனுதாரர் கூறுவது போல், எங்கள் கட்சிக்காரர், பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவது உண்மை தான். காரணம், மனுதாரரான கி.வீரமணி, பெரியார்கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிப் போய், பெரியார் கொள்கைகளை சிதைக்கவும் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. எங்களது கட்சிக்காரர் போன்ற உண்மையாகவே பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோர்தான், பெரியாரின் தத்துவங்களை, சிந்தனைகளை பதிப்பித்து, பரப்புவதற்கான உரிமை பெற்றவர்கள். பெரியாரே தனது எழுத்துக்களுக்கு பதிப்புரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிலிருந்து பெரியார் எழுத்து, பேச்சுகளைத் திரட்டுவதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்ததாக மனுதாரர் கி।வீரமணி கூறுவதில் கொஞ்சம்கூட உண்மை கிடையாது. உண்மையில் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி பத்திரிகைகளின் பல பிரதிகளே மனுதாரரிடம் கிடையாது. மனுதாரருக்கு பெரியார் எழுத்தில் பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்பதற்கு இதுவே போதுமானது. எங்களது கட்சிக்காரரிடம் இருப்பதுபோலவே, மனுதாரரிடமும் சில ‘குடிஅரசு’ பிரதிகள் இருக்கலாம். அதன் காரணமாகவே அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. மனுதாரரின் திருச்சியிள்ள அலுவலகத்திலிருந்து எங்கள் கட்சிக்காரர் ‘குடிஅரசு’ பிரதிகளை தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டதாக மனுதாரர் கூறுவது உண்மையல்ல. தஞ்சை பகுத்தறிவாளர்களை குடிஅரசு தொகுப்புக்கு தமது அறக்கட்டளை நியமித்ததாக மனுதாரர் கூறுவதும் உண்மையல்ல. குடிஅரசு குறுந்தகடுகளும் மனுதாரரிடம் கிடையாது. நாங்கள் லாபத்துக்கு ‘குடிஅரசு’களை விற்பதாகக் கூறுவதும் உண்மையல்ல. பல லட்சம் ரூபாய் இழப்பில் தான் நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுகிறோம். மனுதாரரிடமிருந்து ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக்கூட நாங்கள் எடுக்கவில்லை. மனுதாரரிடமே பெரியாரின் எழுத்துகள் முழுமையாக இல்லாதபோது, அவரிடமிருந்து நாங்கள் ‘திருடிச் சென்று விட்டோம்’ என்ற கேள்விக்கே இடமில்லை. பெரியார் எழுத்துகள் அனைத்துமே, திருச்சியில் மணியம்மை மேல்நிலைப் பள்ளியில் திரட்டப்பட்டதிலிருந்துதான் தொகுத்தோம் என்று நாங்கள் எந்த ஒப்புதலும் தரவும் இல்லை.
பெரியார் எழுத்துகளை பதிப்பிப்பதால், தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி।வீரமணி கூறுகிறார். பெரியார் எழுத்துகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்றும், எவருமே பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றும் மனுதாரர் கருதுகிறாரா என்பது புரியவில்லை. பெரியார் எழுத்துகளைப் படிக்கும் போதுதான் பெரியாரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, மனுதாரரும் அவரது குழுவினரும் தயாரித்த பெரியார் சினிமாவிலிருந்து பெரியாரை புரிந்து கொள்ள முடியாது.
மனுதாரர் வீரமணி தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்। அவர் கூறும் பொருளாதார இழப்பு, நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதால் நிகழ்ந்துள்ளதா? அல்லது பெரியார் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை, மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை।மனுதாரரும், அவரது சகாக்களும் பெரியார் எழுத்துகளுக்கு உரிமை படைத்தவர்கள் அல்ல. எனவே நீதிமன்றம் தடை ஆணையை பிறப்பிக்கக் கூடாது. மனுதாரர் விரும்பினால் எங்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரும் பெரியார் எழுத்து பேச்சுகளை தாராளமாக வெளியிடலாம். பொருளாதாரம், அரசியல், சமுதாயம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை செய்தி ஏடுகள், பத்திரிகைகளிலிருந்து மறு பதிப்பு செய்வது, பதிப்பு உரிமைகளில் தலையிடுவது ஆகாது. கட்டுரைகளை எழுதிய ஆசிரியர், அதற்கு வெளிப்படையாக பதிப்புரிமை பெற்றிருந்தால் மட்டுமே வெளியிட முடியாது. எனவே பெரியாரின் எழுத்து பேச்களை மறுபதிப்பு செய்வது - பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வராது. பெரியாரின் எழுத்துகளை மட்டும் மறுபதிப்பு செய்யவில்லை. பொது மக்களிடம் அவர் பேசிய பேச்சுகளும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இத்தகைய பேச்சுகளை மறுபதிப்பு செய்வது, பதிப்புரிமையில் குறுக்கிடுவது ஆகாது. எனவே இந்த நீதிமன்றம் மனுதாரரின் மனுவை நிராகரித்து நீதி வழங்கக் கோருகிறோம்.

திங்கள், 15 செப்டம்பர், 2008
ஒழுக்கம்
பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும். பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு. ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.
பெரியார்
பெரியார்
வெள்ளி, 12 செப்டம்பர், 2008
கல்வி
எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு. முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.
வியாழன், 11 செப்டம்பர், 2008
பெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து
பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியார் அறிவுக் களஞ்சியம் தமிழர்களின் சொத்து என்று குறிப்பிட்ட தோழர் தியாகு, ‘குடிஅரசு’ கால வரிசைத் தொகுப்பு காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார்.
வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாக ஆற்றிய உரை:
தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்பு களைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்த மாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள். பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப் பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக் கிறது என்பதுதான் வேதனை. பெரியாரின் நூல்கள் வெளி வரப்போகிற செய்தி தமிழ் நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)
எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.
நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளி வந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப் பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.
மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகு தான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழி பெயர்ப்புகள் வெளி வந்திருக்கின்றன. அந்த மொழி பெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத் தேடினோம். ‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக் கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக் கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே. இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதி தாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப் புரிமை கோரவில்லை.
நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக் களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.
பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்ன யிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத் தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய் விட்டது. அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.
புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள்.
அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன். இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில் தான் பணி மலர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது. அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்கு மானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டு வர முயல்கிறது. தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுக் கொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.
நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித் தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டு வா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார். பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளி வந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை. பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்து விடும் என நாம் நம்புவதில்லை. இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் கால வரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும். அப்படித் தான் ஆய்வாளர்கள் எதிர்ப் பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.
பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கி விடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை. இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமான பணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன் படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே; பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி. அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள் என்று.
மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக் குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல் லாம் இருந்தன. அதற்குப் பெயரே ( Early Manuscripts ) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள். இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சி யத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில் தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.
வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட் டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக் கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம். அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ கால வரிசைப்படி வருகிறது. இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.
பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார். எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)
வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடு வதாக காட்டினீர்கள். நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப் போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது. ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளி வருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.
வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கை யல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை. அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரி யாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.
உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.
தமிழக அரசு வீரமணியை காப்பாற்று வதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக் காகக் கூட அல்ல. இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.
பெரியார் வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்து விடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான். இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலை முறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர் தியாகு முழக்கம்
புதன், 10 செப்டம்பர், 2008
‘யுக்திகளே’ இவர்களுக்கு இலட்சியம்!
பெரியார் நினைவிடம் பெரியார் திடலுக்குள். பெரியார் அருங்காட்சியகம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று எவரும் கேட்டுவிடக் கூடாது) பெரியார் திடலுக்குள். நடத்தும் மாநாடுகளும் பெரியார் திடலுக்குள். இப்படி பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கிப் போட்டவர்கள் ‘பெரியாரியலை’யும் பெரியார் திடலுக்குள்ளே முடக்கிட துடிக்கிறார்கள்.
‘குடிஅரசில்’ பெரியாரின் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி இதுவரை வெளியிட முன் வராதவர்கள் - பெரியார் திராவிடர் கழகம் - கடும் முயற்சி எடுத்து வெளிக் கொணரும்போது, “முடியாது; எங்கள் பெரியார் திடலுக்குள்ளே தான் இருக்க வேண்டும்; அது எங்களின் சொத்து; எவராவது வெளியிட்டால், 15 லட்சத்தை, இழப்பீடாக எடுத்து வை” என்கிறார்கள்.
பார்ப்பனர்களும் இப்படித்தான் ‘வேதம்’ தங்களிடமே இருக்கவேண்டும் என்று நிலைப்படுத்தி - அதை மறை பொருளாக்கினார்கள். அதன் காரணமாகவே அது ‘மறை’ என்னும் பெயர் பெற்றது. பெரியார் எழுத்தும் பேச்சும் காலவரிசைப்படி முழுமையாக வெளி வருவதைக் கண்டு இவர்கள் ஏன் பதட்டமடைகிறார்கள்? கொள்கையை முன்னெடுக்கவே பெரியார் அதற்கான செயல் யுக்திகளைப் பின்பற்றினார் என்பதற்கான அடுக்கடுக்கான சான்று கள் அந்த எழுத்துகளிலும், பேச்சு களிலும் பொதிந்து கிடப்பதுதான், இதற்குக் காரணம்.காங்கிரசை பெரியார் ஆதரித்த போதும் சரி; எதிர்த்த போதும் சரி; நீதிக்கட்சியை ஆதரித்த போதும்; அதைக் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கியபோதும்; காமராசர் ஆட்சியை ஆதரித்த போதும்; பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய போதும் - பெரியாரின் உறுதியான கொள்கை அடிப்படையிலான ‘செயல் யுக்திகளை’ புரிந்து கொள்ள முடியும். தனது லட்சியங்களை முன்னிறுத்தியே அவரது ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன.
ஆனால் வீரமணியைப் பொறுத்தவரை ‘யுக்திகளே’ (Strategies) அவரது ஒரே லட்சியமாகிவிட்டது. அந்த ‘யுக்தி’ களுக்காகவே, அவ்வப்போது கொள்கை பரப்பலை செய்து வருகிறார்.தோழர் தியாகுவும் இதே கருத்தை, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக் காட்டினார். வீரமணியின் லட்சியம் ‘யுக்தி’ (Strategy) தான். யுக்திக்காகவே அவரது பெரியார் கொள்கை பரப்புதல் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
“ஆயுள் உள்ள வரை ஆதரவாக இருப்பேன்”; “அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” என்று “சமூக நீதி காத்த வீராங்கனைக்கு” இன்று கலைஞருக்கு பாராட்டு மழை பொழிவது போல் அன்றும் நாள்தோறும் வாழ்த்துப்பாக்களை பாடிக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத்துக்குள் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்டார்கள். வீரமணி, அவர்களை எல்லாம் ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்த்தார். 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவானது. கடும் நெருக்கடிக்கு உள்ளான வீரமணி, தனது ‘யுக்தி’யைப் பயன்படுத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டங்களை தீட்டினார்.
அவசர அவசரமாக பிரச்சார நூல்களை வெளியிட் டார்கள்; புத்தக சந்தைகளை நடத்தினார்கள்; மாநாடுகள் கூட்டப்பட்டன; இவ்வளவும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ உருவான பிறகு தான்! அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் களத்தில் நின்று போராடியது. ‘ராமலீலாவை’ எதிர்த்து ‘இராவண லீலா’ நடத்தி, ராமன் படத்தை எரித்து, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் சிறை ஏகினார்கள். அடுக்கடுக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பெரியார் இயக்க மரபின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் பயணப்பட்டபோது, வீரமணியின் ‘விடுதலை’ முகத்தைத் திருப்பிக் கொண்டது. இவைபற்றியெல்லாம் ஒரு வரி செய்தியும் கிடையாது. கேட்டால், ‘துரோகிகள்’ நடத்தும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று சமூக நீதிகாத்த வீராங்கனைக்கு புகழாரம் சூட்டும் தங்களின் பார்ப்பன எதிர்ப்பே ‘அக்மார்க்’ முத்திரையுடையது என்றார்கள்.
பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் தலைமை ஏற்ற நிலையில், பெரியார் கருத்துகளை கடவுள், மதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் தொகுத்து, ‘பெரியார் களஞ்சியம்’ வெளியிடும் திட்டத்தைத் தொடங் கினார். 6 தொகுதிகள் வரை வெளிவந்தன. 6வது தொகுப்பு வெளி வந்தது 1991 அக்டோபர். அப்போது ‘அம்மா’ ஆட்சிக் கட்டிலுக்கு வந்த நேரம். அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடு வதிலும், கலைஞருக்கு எதிராக அர்ச்சனைகளை நடத்து வதிலும்தான் காலம் உருண்டோடியது. யுக்தியையே லட்சிய மாக்கிக் கொண்டவர்கள், வேறு என்ன செய்வார்கள். ஆட்சி யாளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ‘யுக்திகளே’ திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளாயின.
2003 ஆம் ஆண்டு ‘பெரியார் திராவிடர் கழகம்’ பெரியாரின் ‘குடிஅரசு’ பேச்சு எழுத்துகளைத் தொகுத்து, 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை வெளியிட்டது. பெரியார் சொத்துகளையும் அறக்கட்டளை களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கி.வீரமணி, இந்தத் தொகுப்புகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகள் வீரமணியை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அந்த நெருக்கடியிலிருந்து மீள, ஒரு ‘யுக்தி’யாக பெரியார் களஞ்சியத்தின் அடுத்த தொகுப்பை ‘சாதி-தீண்டாமை’ எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
பெரியார் களஞ்சியத்தின் 6 ஆம் தொகுப்புக்குப் பிறகு 7வது தொகுப்பை வெளியிட கி.வீரமணிக்கு 13 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி வந்தது? 2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான்! அதற்குப் பிறகு தான் ‘குடிஅரசு’ நூல்களை குறுந்தகடுகளாக வெளியிடும் அறிவிப்பும் வந்தது. தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ‘யுக்தியாகவே’ வீரமணி செயல்பட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். ‘சாதி தீண்டாமை’ (7வது தொகுப்பு), 2004 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும், 2005 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் (8வது தொகுப்பு) என ஆண்டுக்கு ஒரு தொகுப்பை திராவிடர் கழகம் வெளியிட்டது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்’ பெரியார் பேச்சு எழுத்துக்களைத் தொகுத்து ஒரே நேரத்தில் இரு தொகுதிகளை வெளியிட்ட போது, மீண்டும் வீரமணிக்கு அதிர்ச்சி.
“இந்த துரோகிகளுக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கு, நம்ம உயிரை வாங்குறானுங்க. பேசாமல், நாம ஒரு அரசியல் கட்சியை துதி பாடுவதுபோல், அவனுகளும், ஒரு அரசியல் கட்சிக்குப் பின்னாலே போக வேண்டியது தானே. இந்த ‘துரோகி’களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று மனம் புழுங்கியிருப்பார். நெருக்கடியிலிருந்து மீள - மீண்டும் - ‘சாதி-தீண்டாமை’ தொகுப்புகள் தொடர்ச்சி யாக வெளிவரத் தொடங்கின. நாமும் மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியோ, பெரியார் நூல்களை வெளிவரச் செய்திருக்கிறோமே என்ற மகிழ்ச்சி தான்.
பெரியார் திராவிடர் கழகம் தனது செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டி, 1925-லிருந்து 1938 வரை 27 தொகுதிகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு அறிவித்தது வீரமணியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனியும், இவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டார்.
பெரியார் கருத்துகளைப் பரப்பு வதற்கு பெரியார் பெயரில் இயக்கம் நடத்துகிறவர்களே தடுக்கிறார்களே என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் வெடித்த நிலையில், பெரியார் கருத்துகளைப் பரப்பும் “துரோகிகள்”, “அநாமதேயங்கள்”, “வெளியேற்றப் பட்டவர்கள்” பட்டியல் மேலும் நீண்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் ‘யுக்தி’ யைப் பயன்படுத்தினார். அதுதான் நடந்து முடிந்துள்ள மாநாடு. தொண்டர் களை தக்க வைத்துக் கொள்ள வழக்க மாக வீரமணி நடத்தும் “யுக்தி” தான்.
“பெரியார் திராவிடர் கழகம்’ 28 தொகுதிகளை ரூ.3500-க்கு வழங்கு கிறதா? இதோ நான் 30 தொகுதிகளை ரூ.2500-க்கு தருகிறேன். ஒரு ‘பை’ இலவசம்” என்று அறிவிப்புகள் வரு கின்றன. இதுவும் நமக்கு மகிழ்ச்சி தான். பெரியார் கொள்கைகள் தீவிரமாகப் பரவும் போதுதான் மக்கள் உண்மை யான பெரியாரியலைப் புரிந்து கொள் வார்கள். சமூக மாற்றத்துக்கும் தயார் ஆவார்கள் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. பெரியார் கொள்கை பரப்புதலை ‘யுக்திக்காகவே’ நடத்தி வரும் கி.வீரமணியின் பார்வையில் நாங்கள் “துரோகிகளாகவும்” “நீக்கப் பட்டவர்களாகவும்” இருக்கிறோம் என்பதுதான் நாங்கள் உண்மையான பெரியாரியல்வாதிகள் என்பதற்கான சான்று. ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். பெரியார் திராவிடர் கழகத்தை முடக்கி விட்டு, ‘யுக்திகளுக் குள்ளேயே’ காலத்தை கடத்தி விடலாம் என்று மட்டும் கனவு காண வேண் டாம். அடிக்க அடிக்க எழும் பந்து போல், பெரியார் திராவிடர் கழகம் வலுப் பெற்று, களப் பணிகளில் இறங்கும்; எங்களின் தோழர்கள் உறுதி யான கொள்கையாளர்கள்; திருவரங்கம் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது - தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியவர்கள். நன்கொடை செலுத்தி கல்லூரிகளில் படிக்க வந்த அப்பாவி மாணவர்கள் அல்ல.
பெரியாரின் ‘குடிஅரசுகள்’ வீர மணிகள் இருட்டடிக்கும் சுயமரியாதை இயக்கக் காலத்தின் உணர்வலைகளை இனி தட்டி எழுப்பப் போவது உறுதி. அப்போது ‘யுக்தி’யாளர்களும் அவரது ‘பக்தியாளர்களும்’ கல்வி நிறுவனங் களின் கணக்குகளை பார்த்துக் கொண் டிருக்க முடியாது; ‘துரோகிகள்’ என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது. காலத்தின் அறை கூவலை சந்திக்க வேண்டியிருக்கும்.
- ‘இரா’

நன்றி
http://periyarmuzakkam.blogspot.com/2008/09/blog-post_09.html
செவ்வாய், 9 செப்டம்பர், 2008
அறிவியல்
இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.
இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிக ளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய ந வீன வசதிகள், தீ உண்டாக்க சக்கிமுக்கிக் கல்லை உராய்ந்îதாம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சாரவிளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த து போலவே இருக்கிறதே!.
கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படி யே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.
சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
தந்தைபெரியார்
திங்கள், 8 செப்டம்பர், 2008
துணிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)