புதன், 31 டிசம்பர், 2008
அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு
அயோக்கியர்களின் மார்க்கம்
செவ்வாய், 30 டிசம்பர், 2008
ஆயுதம்
திங்கள், 29 டிசம்பர், 2008
அரசியல் தொண்டு ஒரு புரட்டு
ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி
ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி
இதனை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பெரியார்திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்
ஞாயிறு, 28 டிசம்பர், 2008
துரோகமல்ல...
சனி, 27 டிசம்பர், 2008
அரசுக்கு அறிவுரை
வெள்ளி, 26 டிசம்பர், 2008
மனித வாழ்வு
புதன், 24 டிசம்பர், 2008
கையில் காசு இல்லாவிட்டால்
செவ்வாய், 23 டிசம்பர், 2008
பெரியாரின் கட்டளைகள்
திங்கள், 22 டிசம்பர், 2008
பேதம் ஒழிய வேண்டும்
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
அரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
சனி, 20 டிசம்பர், 2008
கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன், 18 டிசம்பர், 2008
திராவிடன்
புதன், 17 டிசம்பர், 2008
நமது சுதந்திரத்தின் தன்மை
செவ்வாய், 16 டிசம்பர், 2008
காட்டு மிராண்டிகள்
திங்கள், 15 டிசம்பர், 2008
சுதந்திரம் யாருக்கு?
ஞாயிறு, 14 டிசம்பர், 2008
அடிமை வாழ்வு
வெள்ளி, 12 டிசம்பர், 2008
இளைஞர்தம் இயல்பு
வியாழன், 11 டிசம்பர், 2008
“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.
அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……
மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.
“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”
(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.
அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.
ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.
ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?
இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.
ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’
சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.
சென்றுவா எம் நண்பனே.
நன்றி
ஞாயிறு, 7 டிசம்பர், 2008
சிந்தனா சக்தியற்றவன்
திங்கள், 1 டிசம்பர், 2008
ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்
தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம் 30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. திருப்பூரில் அனுப்பர்பாளையம்,பழைய பேருந்துநிலையம், வெள்ளியங்காடு.
வீரபாண்டி பிரிவு ஆகிய் இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் எழிலன், பெரியார்திராவிடர் கழக நிர்வாகிகள் அங்ககுமார்,துரைசாமி,அகிலன்,முகில்ராசு,கார்த்திகேயன்,
ராஜேஷ்குமார்,விவேகானந்தன், மற்றும் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வெள்ளி, 28 நவம்பர், 2008
எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ம.தி.மு.க
மாவட்டச்செயலாளர் ஆர்.டி. மாரியாப்பன்,இந்திய பொதுவுடமைக்கட்சியின் வட்டாரச்செயலாளர்
கே.சி.ராதாகிருஷ்ணன்,பெரியார்திராவிடர்கழகத்தின் பொள்ளாச்சி மனோகரன்,கா.கருமலையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஈழத்தமிழரின் கண்ணீர் காட்சிகள் வீடியோ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தோடு உடுமலை தமிழ்ச்சங்கம்,மற்றும் கொங்குமண்டல ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகள்
இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
வெள்ளி, 21 நவம்பர், 2008
விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி
வியாழன், 20 நவம்பர், 2008
சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை.
-எஸ். சௌமியா
அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி.
அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.
நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.
அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதியை உங்களுக்குத் தருகிறேன்;
1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).
3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).
4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).
5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).
6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?
இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..
இந்த ஜாதிவெறிதான் தமிழனின் வீரமா?
தமிழனை பல்லவன் ஆண்டு இருக்கிறான். விஜயநகர மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள். மொகலாயர்கள் ஆண்டு இருக்கிறார்கள். வெள்ளையன் ஆண்டு இருக்கிறான் தமிழர்கள் அல்லாத பல நாட்டு மன்னர்கள் தமிழர்கள் மீது பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியிருக்கிறார்கள், சுரண்டி இருக்கிறார்கள்
‘குற்றப்பரம்பரையினர்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் உட்பட பலரும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து வராத வீரம், ஒரு தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்துத் தலைவராக வரும்போது வருகிறதே? இந்த மோசமான மனநிலைக்கு பெயர் தான் தமிழனின் வீரமா?
ஜாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை அவமரியாதை செய்வதை, பொருட்படுத்தாமல் இருப்பதும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மேல் நிலைக்கு வருவதை பொறுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான் ஜாதி இந்துவின் உளவியல். இப்படித்தான் ஜாதி சிஸ்டம் உயர்ஜாதிக்காரர்களுக்கு அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சினை இல்லாமல், ஜாதி ரீதியான சமூக அந்தஸ்த்தோடு இயங்குகிறது.
இடைநிலை ஜாதிகளுக்கு ‘சூத்திரன், வேசி மகன்’ என்ற பட்டங்கள் இருந்தாலும் அதைக் குறித்தான எந்த சொரணையும் இல்லாமல், பார்ப்பனியத்தின் மீது எந்த கீறலும் விழாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தனது காழ்ப்புணர்சியின் மூலமாக ஜாதி மேலாதிக்கத்தை, பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்தான் மிகவும் பத்திரமாக பாதுகாக்கிறது
மேலவளவு முருகேசனின் மனைவி பிணமான தன் கணவனுடன்
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை பார்த்தே உங்களால் ஒருநாள் முழுக்க சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். மேலவளவு முருகேசன் கொலையைக் காட்சியாக்கிக் காட்டியிருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவை மறந்துதான் வாழ்ந்து இருக்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சண்டை காட்சிகளை திரும்ப, திரும்ப தொலைக்காட்சியில் காட்டப் படுவதால் மக்களிடம் தேவையற்ற பதற்றமும், கலவரமும்தான் ஏற்படும். வர்த்தக மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவதை அரசு தடைசெய்யவேண்டும்.
***
இந்தச் சண்டை நடக்கும்போது அதை தடுக்கு முயற்சிகாமல் காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்தது சட்டபடியும் குற்றம். அதை தடுக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரட்டி, விரட்டி படம் எடுத்த போட்டோக் கிராப்பர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் செய்தது தர்மபடி குற்றம்
தனிமனிதராக இந்தச் சண்டைய தடுக்க முயற்சித்த கேண்டின் பொறுப்பாளருக்கு இருந்த இந்த உணர்வும், தைரியமும் - காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லாதது வெட்கப்படக்கூடியது. மிகுந்த வன்முறை நிறைந்தது.
கண்முன்னே ஒருவன், புதைக்குழியில் சிக்கி ‘காப்பாற்றுங்கள்’ என்ற கூக்குரலிட்டபடி மரணதத்தோடு போராடுகிறான். பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்கள் அவரை காப்பாற்றுவார்களா? மரணம் வரை படம் எடுப்பார்களா?
அதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது. அதனால் மரணம் வரை படம் எடுப்பார்கள். பார்வையாளர்களை பரபரப்பாக்கி பல முறை பார்க்க வைக்கிற காட்சி அது. தொழிலில் ஒரு நல்ல பெயர் கிடைக்கும். முதலாளியின் பாராட்டையும் பெற முடியும். முன்கூட்டியே அந்த நபர் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளபோவது தெரிந்தால், நன்றாக மார்க்கெட்டிங் செய்து,This program sponsor by என்றும் ஒளிபரப்பலாம்.
அது மனித தர்மமாக இல்லாமல் இருக்கலாம். அதுதான் தொழில் தர்மம். தொழில் அதிபதிர்களுக்கு லாபம் தருகிற தர்மம். அதுவேதான் பத்திரிகை தர்மமும்.
நன்றி
வே.மதிமாறன்
சனி, 15 நவம்பர், 2008
ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அமைதி ஊர்வலம் - பொதுக்கூட்டம் சேலம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றம் முன்பாக மாணவர்கள் பேரணி- போராட்டம்
|
வெள்ளி, 14 நவம்பர், 2008
கூட்டுறவு
புதன், 12 நவம்பர், 2008
‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’- இதுதாண்டா இந்தியா
· கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.
· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ - இது பழமொழி அல்ல.
· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.
· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.
· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.
· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.
· ‘இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.’ -கையாலாகாத டாக்டரின் வசனம்.
· “அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்.”
பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.
· “தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்” என்று ராஜபக்சே சொல்கிறார்.
தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.
நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.
இதுதாண்டா இந்தியா.
-வே.மதிமாறன்
நன்றி
செவ்வாய், 11 நவம்பர், 2008
ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு, 9 நவம்பர், 2008
கொதித்தெழு தமிழினமே
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2008
(107)
-
▼
டிசம்பர்
(23)
- அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு
- அயோக்கியர்களின் மார்க்கம்
- ஆயுதம்
- அரசியல் தொண்டு ஒரு புரட்டு
- ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்...
- துரோகமல்ல...
- அரசுக்கு அறிவுரை
- மனித வாழ்வு
- கையில் காசு இல்லாவிட்டால்
- பெரியாரின் கட்டளைகள்
- பேதம் ஒழிய வேண்டும்
- ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
- கண்டன ஆர்ப்பாட்டம்
- திராவிடன்
- நமது சுதந்திரத்தின் தன்மை
- காட்டு மிராண்டிகள்
- சுதந்திரம் யாருக்கு?
- அடிமை வாழ்வு
- இளைஞர்தம் இயல்பு
- “நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
- சிந்தனா சக்தியற்றவன்
- வீரவணக்கம்
- ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்
-
►
நவம்பர்
(13)
- எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்
- விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி
- சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்த...
- ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரியும் போர் நிறுத்தம் ச...
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றம் முன்...
- கூட்டுறவு
- ‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’- இதுதாண்டா இந்தியா
- ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் ...
- கொதித்தெழு தமிழினமே
- ► செப்டம்பர் (9)
-
▼
டிசம்பர்
(23)