ஞாயிறு, 9 நவம்பர், 2008

கொதித்தெழு தமிழினமே

சிங்களக் காடையர்கள் செய்கின்ற வன்கொடுமை 
அங்கு நம் இனத்தைப் பூண்டோடு அழிக்கிறதே! 
செங்குருதி சேற்றில் ஈழம் புதைவதோ? 
பொங்கி எழுந்து புறப்படு தமிழினமே!

தாயென ஒருத்தியாய்த் தாங்க வேண்டியவள் 
பேயெனக் கத்தி பிதற்றுகிறாள் அன்றாடம் 
நாயினும் இழிந்த நடிப்புலக காரிகையைச் 
சீயென உமிழ்ந்து சிலிர்த்தெழு தமிழினமே 

'இந்து'ராம் பார்ப்பான் இரண்டகம் விளைக்கின்றான் 
சந்தில் 'சோ' பார்ப்பான் சளைக்காமல் குறைக்கின்றான் 
வந்தேறி இனத்தின் வாலறுக்க வேண்டாமா?
செந்தீப் பிழம்பாய் திரளுக தமிழினமே!

கேட்டையே எண்ணிக் கீழறுப்புப் பண்ணக்
கோட்டானாய்த் தில்லிக் கூமுட்டை உள்ளவரை
நாட்டாமை செய்து நன்மை விளைப்பானா?
பூட்டுகள் நொறுங்கப் புறப்படு தமிழினமே!

படைக் கருவிகள் தந்து பயிற்சிக்கும் ஆள் அனுப்பி
தடைச்சுவர்கள் எழுப்பித் தாயக உரிமைப்போர் 
உடைபடச் செய்யும் ஓநாய்த் தில்லியர்க்கு 
விடைதர வேண்டும் நாம் வெகுண்டெழு தமிழினமே!

செழித்த போர் வேங்கைபிரபாகரன் பேர் சொன்னால்
புழுத்து நாறும் பொய் மூட்டைக் காங்கிரசார்
கழுத்தறுந்த கோழிகளாய்க் கண்டபடி குதிக்கின்றார்
கொழுப்படக்க வேண்டும் நாம் வெகுண்டெழு தமிழினமே

முரண்பட ஈழப்போர் முனையில்பின் னடைவெனினும்
சரண்படல் இல்லை. வீரச்சாவுதான் எல்லை எனத் 
திறன் காட்டி ஆர்க்கும் சினவேங்கைப் புலிகட்கே
அரண் சேர்க்க வேண்டும் நாம் ஆர்த்தெழு தமிழினமே!

யார் அணி நிற்பதென சண்டை இனி மாளட்டும்
பேரணிகள், சிறைப்படல்கள் பெருந்தீயாய் மூளட்டும்
போரணிபோல் எழுச்சிபுயல்வேகம் கொள்ளட்டும்
ஓரணி நாம் என்றே உலகே சொல்லட்டும்!
                                                                                      -தமிழேந்தி
 
       [ நன்றி. சிந்தனையாளன்,நவம்பர்-2008]

வலைப்பதிவு காப்பகம்