சனி, 1 நவம்பர், 2008

இலங்கை தோல்வியை எற்றுக் கொள்ள வேண்டும்-நடிகர் ரஜினி

ஈழத்தமிழர்களை பாதுகாக்க உண்ணாவிரதம் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுப்பாடு என்ற பெயரில் யாரையும் தக்கி பேசக்கூடாது தடை விதித்திருந்தது குறிப்பாக இந்திய,இலங்கை அரசுகளை விமர்சித்து பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டு விட்டு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி மாத்திரம் இயக்குனர் பாரதிராஜாவை பெய்ர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அதோடு நில்லாமல் ஈழத்தமிழர்கள் இந்தியர்கள் என்றும் பிழைக்கப்போனவர்கள் என்றும் ஏதிலிகளாக வந்திருக்கும் அவர்களை தாயகம் திரும்பியோர் என்று அழைத்தால் சலுகைகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அதிமேதாவித்தனமாக பேசினார்.வரலாறு எதுவும் தெரியாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட தமிழே தெரியாத கலையுலகம் ஙே.. என விழித்துக் கொண்டிருந்தது கொடுமை. சன் தொ(ல்)லைக்காட்சி அதை நேரடியாக ஒலிபரப்பியது அதைவிடக் கொடுமை. ஏதோ... அந்தநேரத்தில் அங்கு வந்த திருமாவளவன் வரலாற்றை தெளிவு படுத்தி பதில்சொல்ல சத்தியராஜ் வழிமொழிய கொஞ்சம் தப்பித்தது. எப்போதும் குழப்பும் ரஜினி இங்கு தெளிவாக "முப்பது ஆண்டுகளாக ராணுவத்தை வைத்து சண்டை போட்டு ஜெயிக்க முடியலேன்னா தோல்வியை ஏத்துக்க வேண்டியத்தானே" என பேசி இலங்கை அரசுக்கு ஒரு குட்டு வைத்தார். எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக திரையுலகம் போராட்டம் நடத்தியது வரவேற்புக்குரியதே... ஆனால் திரையுலக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடத்திய போராட்டத்தினால் ஒரு எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. நடிகர்கள் நடத்திய போராட்டத்தினால் தமிழக அரசு திரட்டும் நிதிக்கு ரூ.45 லட்சம் கிடைத்தது அவ்வளவு தான்.

வலைப்பதிவு காப்பகம்