வெள்ளி, 31 அக்டோபர், 2008

ஈழத் தமிழர்களும் சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்களும்

-
கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.
ஒன்று தமிழ் சினிமா.இரண்டு ஜோதிடம்.
உலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது. இதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம்.
அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.
பெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் - ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள்.
தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்?’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள்.
ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.
***
சினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.)
நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை. சாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை.
ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.
கர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள்.
இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும். இன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா ? அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா? அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா? பார்ப்போம்.

-வே. மதிமாறன்

மதி-பதில்

கேள்வி: திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள் திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டால் குடும்பம் என்ற அமைப்பே நிர்க்கதியாகிவிடாதா?
பதில்
: குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்குத் தெரியாது எப்படிப் பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானது தான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா, அது கல்யாணமா?
- வே.மதிமாறன்

செவ்வாய், 28 அக்டோபர், 2008

ஜெயலலிதாவின் சூழ்ச்சி - காங்கிரசின் மகிழ்ச்சி

தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.

-வே. மதிமாறன்

ஜெயலலிதா பிதற்றல்

"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?
ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.
நன்றி
. குமுதம் வார இதழ்

சனி, 25 அக்டோபர், 2008

கண்டிக்கிறோம்....

கட்டப்பஞ்சாயத்துகும்பல்,நாட்டையே பிளாட் போட்டு விற்கும் வியாபாரக்கூட்டம்,அரசியல் என்கிற பெயரில் கொள்ளையடிப்பவர்கள்... இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகவும், எதிர்க்ட்சி,ஆளும்கட்சிகாரர்களாகவும்... உலா வர வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த திரைப்பட இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக்கண்டிக்கிறோம்....

இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்

இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.....

இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்

இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம்

வியாழன், 23 அக்டோபர், 2008

'தபசு' இருங்கள்.

படுக்கையிலிருந்து எழும்போது உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாதநாளை வீணாய் போனதாகவும் உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாயும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக்கொடுக்கும் பாக்கியத்தை அடைய 'தபசு' இருங்கள்.
-தந்தைபெரியார்

புதன், 22 அக்டோபர், 2008

ஏழைகளுக்காக பாடுபடுவோர் யார்?

ஏழை மக்களுடன் பழகி; ஏழை மக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள் தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாக பாடுபட முடியுமே யழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்கள் துன்பத்தைப் போக்கப் பாடுபட முடியாது.
தந்தைபெரியார் [குடியரசு 4-10-32]

திங்கள், 20 அக்டோபர், 2008

நம் நாடு இது! பொறுப்பும் நமதே!


மற்றவர்களை விட நமக்குத்தான் பொறுப்பு அதிகம். ஏனெனில் இது நம்முடைய நாடு; இதில் வாழ்பவர்கள் 100க்கு 95 பேர்கள் நம்முடைய மக்கள்தான். நாம்தான் மக்களுக்கு ஒழுக்கத்தையும் யோக்கியதையையும் கட்டுப்பாட்டையும், கற்பித்துக்கொடுக்கவேண்டியவர்கள். பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிச்சை எடுக்க வந்தவர்களாகையால் இந்தநாட்டைப்பற்றியோ,இந்தநாட்டு மக்களைப்பற்றியோ அவர்களுக்குக் கவலை கிடையாது. ஆகவே அவர்களைக் கண்டு நாம் ஆத்திரப்படக்கூடாது ஆராய்ந்து தெளிய வேண்டும்.
தந்தைபெரியார்
[29-5-48 குடியரசு]

வெள்ளி, 17 அக்டோபர், 2008

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து 13-10-2008 திங்கள் மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச்செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார். பெரியார்திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு துரைசாமி,ஆதித்தமிழர்பேரவை மாநில இளைஞரணி செயலாளர் நீலவேந்தன்,அகிலன்,முகில்ராசு,கார்த்திகேயன்,சண்முகம்,தியாகு மனிதநேயப்பாசறை அமைப்பாளர் சக்திவேல்,இயற்கைவாழ்வகம் முத்துச்சாமி,புரட்சிர இளைஞர் முன்னணி கதிரவன் ஆகியோர்கலந்துகொண்டு பேசினார்கள். பெண்கள்,குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 10 அக்டோபர், 2008

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

குஜராத்,ஒரிஸ்ஸா,ராஜஸ்தான்,கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டையும் மதக்கலவர பூமியாக்க இந்து மத வெறி சக்திகள் துடிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார்-அண்ணா சிலைகளை அகற்றப்போவதாக இந்துத்துவ அமைப்புகள் அறிவித்தன. இதைக் கண்டித்தும் பெரியார்-அண்ணா சிலைகளை பாதுகாக்கவும், மதவெறி சக்திகளுக்கு எதிராக தடியேந்தி ஊர்வலம் செல்வதாக பெரியார்திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 5-10-2008 ஞாயிறு காலை 11 மணியளவில் திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் தண்ணீர்த் தொட்டி அருகில் பெரியார் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்டதோழர்கள் கையில் தடியுடன் திரண்டனர். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்ததால் அங்கு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் தோழர்களை கைது செய்தனர். கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திருப்பூர் மாநகர மேயர் க.செல்வராஜ் மற்றும் தி.மு.க, பா.ம.க நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

வெள்ளி, 3 அக்டோபர், 2008

மனிதன்

"பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைபிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்."

                                                                            -தந்தைபெரியார்

புதன், 1 அக்டோபர், 2008

சுயமரியாதை

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்