வெள்ளி, 10 அக்டோபர், 2008

திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது

குஜராத்,ஒரிஸ்ஸா,ராஜஸ்தான்,கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டையும் மதக்கலவர பூமியாக்க இந்து மத வெறி சக்திகள் துடிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார்-அண்ணா சிலைகளை அகற்றப்போவதாக இந்துத்துவ அமைப்புகள் அறிவித்தன. இதைக் கண்டித்தும் பெரியார்-அண்ணா சிலைகளை பாதுகாக்கவும், மதவெறி சக்திகளுக்கு எதிராக தடியேந்தி ஊர்வலம் செல்வதாக பெரியார்திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 5-10-2008 ஞாயிறு காலை 11 மணியளவில் திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் தண்ணீர்த் தொட்டி அருகில் பெரியார் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்டதோழர்கள் கையில் தடியுடன் திரண்டனர். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்ததால் அங்கு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் தோழர்களை கைது செய்தனர். கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திருப்பூர் மாநகர மேயர் க.செல்வராஜ் மற்றும் தி.மு.க, பா.ம.க நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

வலைப்பதிவு காப்பகம்