ஞாயிறு, 2 நவம்பர், 2008

இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...இன்று 2-11-2008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் துரைசாமி, சூலூர் தி.மு.க. நகரச்செயலாளர் ஜெகநாதன், கண்ணம்பாளையம் தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், சூலூர் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் சூ.பெ.கருணாநிதி, முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர் சூ.ஆ.முருகேசன்,பெரியார் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,தமிழ்ச்செல்வி,வீரமணி,அ.ப.சிவா, மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி,கோவை நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பல்லாயிரக்கனக்கான மக்கள் பார்த்தவாறு சென்றனர். இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இராமகிருட்டிணன் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதலை கண்டித்தும் பேசினார்.

வலைப்பதிவு காப்பகம்