வெள்ளி, 28 நவம்பர், 2008

எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்
27-11-2008 மாவீரர் நாளை முன்னிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகராட்சி பத்மசிரீ திருமண மண்டபத்தில் "எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்! என்கிற தலைப்பில் ஈழ நிலைமைகளை விளக்கி 
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ம.தி.மு.க 
மாவட்டச்செயலாளர் ஆர்.டி. மாரியாப்பன்,இந்திய பொதுவுடமைக்கட்சியின் வட்டாரச்செயலாளர் 
கே.சி.ராதாகிருஷ்ணன்,பெரியார்திராவிடர்கழகத்தின் பொள்ளாச்சி மனோகரன்,கா.கருமலையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஈழத்தமிழரின் கண்ணீர் காட்சிகள் வீடியோ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.  இந்தக் கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தோடு உடுமலை தமிழ்ச்சங்கம்,மற்றும் கொங்குமண்டல ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகள்
இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

வலைப்பதிவு காப்பகம்