நம்மைப் படைத்த கடவுள் உயர்வு தாழ்வு கற்பித்து நம்மை ஏன் சிருட்டிக்க வேண்டும்? உலகச் சமூகத்தில் நீக்ரோ இனந்தான் கீழ்ப்பட்டது. அவர்களை வாணிபர்கள் விலைக்கு வாங்கி விற்றார்கள்; அவர்கள் வீதியில் நடக்கக் கூடாது என்றெல்லா மிருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டது. அமெரிக்கச் சர்க்காரால் இன்று 1951 சனங்கியைப்படி 100க்குத் 90 பேர் படித்தும், பட்டம் பெற்றும் வருகிறார்கள், எனவே காட்டு மிராண்டிக் காலச் சமூகமெல்லாம் முன்னேற்றமடைந்து மறுமலர்ச்சி பெற்று வாழும்போது, சேர-சோழ-பாண்டியர்களின் ஆட்சிகளில் வாழ்ந்த நம் இனம், அறிவுடன் வீரத்துடன் இருந்த நம் இனம் ஏன் இன்னமும் இழிவு தரும் மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முறையில் இருக்கிறோம்? நீங்கள் நன்றாகச் சிந்தித்துப்பாருங்கள். நமக்குள் இருக்கும் பேதம் ஒழிய வேண்டும்.
- தந்தை பெரியார்