அரசியல் என்பது உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவைகளைப் பொறுத்ததாய் இருப்பதால் தேசியம், தேச பக்தி என்பது பெரிதும் வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண்டு பதவி, உத்தியோகம் பெற ஆசைப்படுபவர்களிடம் கூலி பெற்றுக் கொண்டு குலைப்பதே மகாப்பெரிய தேசியமாய் விளங்குகிறது.
இந்த மாதிரி அரசியலும் தேசியமும் ஏழைப்பாட்டாளி மக்கள் தலையில் கையை வைத்து அவர்களது ரத்தம் வேர்வையாய்ச் சிந்த உழைக்கும் உழைப்பை கொள்கை கொண்டு சோம்பேறிகளும், அயோக்கியர்களும், பொறுப்பற்ற காலிகளும் பிழைக்கத்தான் மார்க்கமாய் இருந்து வருகின்றது.
தந்தை பெரியார் [குடியரசு 20-9-1936]