செவ்வாய், 9 அக்டோபர், 2007
திருப்பூரை கலக்கிய ஊர்வலம்
தந்தை பெரியார் அவர்களின் 129 -ஆவது பிறந்த நாள் விழா திருப்பூரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 30 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியிலிருந்து மாவட்டத்தலைவர் துரைசாமி அவர்கள் தலைமையில் புறப்பட்ட இருசக்கர வாகன ஊர்வலம். திருப்பூரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று கல்லாங்காடு,வீரபாண்டி,சந்தைபேட்டை,பழையபேருந்து நிலையம்,தொடர்வண்டிநிலையம்,ராயபுரம்,குமார்நகர்,பெரியார்நகர்,போயம்பாளையம்பிரிவு,புதியபேருந்து நிலையம் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி வைத்து இரட்டை குவளைஒழிப்பு,மற்றும் கேது சமுத்திர திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து கொண்டே வந்த ஊர்வலம் வெள்ளியங்காடு வந்தடைந்தது இறுதியாக அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோபிவேலுச்சாமி,மடத்துக்குளம்அன்பு,வழக்கறிஞர்சுப்புராஜ் ஆகியோர் பேசினர் மன்னைதங்கம்,தியாகு ஆகியோர் கொள்கை பாடல்களை பாடினர். நிகழ்ச்சிகளில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர்அங்ககுமார்,அகிலன்,நகர தலைவர் சண்முகம்,ஒன்றியபொறுப்பாளர்கள் இராமசாமி,அவிநாசியப்பன்,பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் விஜயன்,ஆறுமுகம்,சண்.முத்துக்குமார்,ஜீவாநகர்குமார்,ஜீன்ஸ்நிறுவனஉரிமையாளர்கள்கண்ண்ன்,வினோத்,சுரேசு உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவரணிஅமைப்பாளர் கார்த்திகேயன்,பெரியசாமி,முத்து, ராமு,லச்சுமணன் ஆகியோர் செய்திருந்தினர்.அனைவருக்கும் முகில்ராசு அவர்கள் மதியம் மாட்டுக்கறி விருந்து வழங்கினார்.