புதன், 10 அக்டோபர், 2007
கோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;
அக்டோபர்.2அன்று கழகம் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அன்று காலை 10 மணிக்கு பல்லடத்தில் இருந்து மாவட்டத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் புறப்பட்ட போராட்டக் குழுவினர் முதலில் செம்மிபாளையம் சென்றனர். அங்குள்ள தேநீர்கடையில் இரட்டை குவளைகளை கடைக்காரரே அப்புறப்படுத்தி இனிமேல் வைக்கமாட்டோம் என உறுதியளித்தார் அதைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர் மேற்கு ராசாக்கவுண்டம்பாளையம் சென்றனர். அங்கிருந்த தேநீர் கடையில் இரட்டை இருக்கைகளை கழகத்தோழர்கள் அப்புறப்படுத்த கோரினர் ஆனால் கடைக்காரர் மறுத்ததால் தோழர்கள் இருக்கைகளை அடித்து நொறுக்கினர்.பின்னர் அங்கிருந்து பல்லடம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செ.ம. வேலுச்சாமியின் ஊரான செங்கத்துறைக்குச் சென்றது ஆனால் ஊருக்கு முன்னாடியே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் தோழர்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி சுமார் 60 தோழர்களை கைது செயதனர். கைது செய்யப்பட்டவுடன் தோழர்கள் துணை போகாதே,துணை போகாதே காவல்துறையே துணை போகாதே சாதி வெறிக்கு துணைபோகாதே...அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் கருப்புசட்டைகள் அஞ்சமாட்டோம்... உடைப்போம் உடைப்போம் இரட்டை குவளைகளை உடைப்போம் என முழக்கமிட்டவாறே காவல் துறையின் வாகனத்தில் ஏறினர்.கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு மேற்குராசாக்கவுண்டம்பாளையத்தில் இரட்டை இருக்கைகளை உடைத்த காரணத்திற்காக பொங்கலூர் கார்த்திக்,சுக்கம்பாளையம் ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துவிட்டு மற்ற தோழர்களை விடுதலை செய்தனர். இந்தபோராட்டத்தில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார்,சூலூர் பன்னீர்செல்வம்,பல்லடம் திருமூர்த்தி,ஒன்றியச்செயலாளர் விஜயன்,பொங்கலூர் மயில்சாமி,திருப்பூர் சண்முகம், மாணவரணி அமைப்பாளர்கள் திருப்பூர் கார்த்திகேயன்,சூலூர் பனிமலர் மற்றும் சூலூர் தமிழ்ச்செல்வி,அ.ப.சிவா,அனுப்பட்டி பிரகாஷ்,முகில் ராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.