புதன், 10 அக்டோபர், 2007
"இராமன் பாலம்" ஓர் வரலாற்று மோசடி - கருத்தரங்கம்
திருப்பூர் கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் 7.10.2007 ஞாயிறு காலை 9 மணிக்கு "இராமன் பாலம்" ஓர் வரலாற்று மோசடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் ம.பெரியசாமி தலைமை வகித்தார் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தொடக்கவுரை நிகழ்த்தினார் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் கருத்துரை ஆற்றினார் கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர் கூட்டத்தில் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் இல.அங்ககுமார், மாவட்ட தலைவர் சு.துரைசாமி, அகிலன், சரவணமூர்த்தி, முகில்ராசு, பனிமலர், இரமேசு, முத்து, தனகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக சி.தினேசு நன்றியுரை ஆற்றினார்.