செவ்வாய், 6 நவம்பர், 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம் தமிழ்நாட்டின் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றதுதாராபுரம் சாலை உசா திரையரங்கம் அருகிலிருந்து வீரவணக்க ஊர்வலம் புறப்பட்டு, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
அங்கு நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், பாட்டளி மக்கள் கட்சி,திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் வீரவணக்க செலுத்தினர். நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்திருந்தது