வியாழன், 22 ஜனவரி, 2009

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்‏ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்கு துணை போகிற இந்திய அரசைக்கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணிக்க அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் பார்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சிக்கண்ணா கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அன்சாரி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பார்க் கல்லூரி மாணவர்கள் ராசேசு குமார் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விரு ஆர்ப்பாட்டங்களிலும் தமிழ்நாடு மாணவர் கழகஅமைப்பாளர்கள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், கிருஷ்ணன், முருகன், பாலச்சந்திரன், பிரகாசு பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  


வலைப்பதிவு காப்பகம்