வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கை நிருபர்

உலகத்திலேயே மானங்கெட்ட மக்களில் நெ.1 இந்த பத்திரிக்கை நிருபர்கள் தான். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அவ்வளவு அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள். எல்லாப் பத்திரிக்கைகளும் பார்ப்பனப் பத்திரிக்கைகள்-அவர்கள் அடிமைப் பத்திரிக்கைகள் தான்; நிருபர் கள் எவனையெடுத்தாலும் பார்ப்பன நிருபர்கள்தான் வருவார்கள். நம்மிடம் பேசும் போது நாமொன்று சொன்னால் அதைத் திருத்தி விஷமத்தனமாக பிரசுரிப்பார்கள். நம்மவன் பத்திரிக்கை நடத்துகிறான் என்றாலும்,அவன் என்னமோ பார்ப்பானுக்கேதான் பிறந்ததாகக் கருதிக் கொண்டு பார்ப்பன நலனுக்கு ஆன பத்திரிக்கையாகவே நடத்துகிறான். பார்ப்பனர்களையே வைத்து அவர்களிஷ்டப்படி நடத்துகிறான்.
-தந்தைபெரியார்

புதன், 6 ஆகஸ்ட், 2008

பத்திரிகைகள்

தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும்,பார்ப்பானின் அடிமைகளிடமும் சிக்கிவிட்டதால் புரட்டு, பித்தலாட்டங்கள்மூலம் மனிதனை மடையர்களாக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன.அவற்றிற்கு முட்டாளுடைய, மூடநம்பிக்கைக்காரனுடைய, அயோக்கியனுடைய ஆதரவு அதிகமிருப்பதால் அவைகள் தாம் அதிகம்விற்பனையாகின்றன, பாமர மக்களிடையே பரவுகின்றன.மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள்ஒன்றிரண்டும் இருக்கின்றன என்றாலும் மக்கள் அவைகளைவிரும்புவது இல்லை.


- தந்தைபெரியார்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கைத்தொண்டு

கடவுள் தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு நம்நாட்டில் விபச்சாரிகள் வசம் இருந்தது போல மக்களுக்குத் தொண்டு செய்யும் பத்திரிக்கைத் தொழில் பெரிதும் நம்நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கிறது விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொதுமக்களை ஒழுக்கக்கேடர்கள்,நாணயக்கேடர்களாக ஆக்குவது போலவே,அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் நடத்தப்படும்பத்திரிக்கைத் தொண்டும்,பொதுமக்களை நாணயக்கேடு,ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கி விடுகிறது.
தந்தைபெரியார்

பொருளாதாரம்

இன்றைய அமைப்பில் கையில் காசில்லாவிட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ள முடியாது. மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன்,அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம் ஆனதால் நல்லமுறையில் கொஞ்சக் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்துகொள்ளவோ வேண்டியதில்லை.
தந்தைபெரியார்
[விடுதலை 12-07-55]

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

பொதுத்தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான்.சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும்,மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்.மனிதன் எவ்விதத்திலாவது சமுதாயத்திற்கு பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்க்காக வாழ வேண்டும்.
-தந்தைபெரியார்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

இழிதன்மை

நம் வீட்டுக்குள் அந்நியன்புகுந்து கொண்டதோடல்லாது ,அவன் நம் எஜமான் என்றால் _நமக்கு இதை விட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.
-தந்தைபெரியார்

திருந்த மாட்டானா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டது... கன்னடனின் உணர்வை பார்த்த பிறகும், ரஜினியின் உண்மை முகம் தெரிந்த பிறகும்...இனியாவது..அதிகாலை 4 மணிக்கு தியேட்டருக்கு போய் ரஜினி படம் பார்க்க தவம் கிடக்கும்இழி பிறவி தமிழன் திருந்த மாட்டானா?
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
-ஏமாளித்தமிழன்