திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரின் குடியரசு நூல் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக அறிவித்தது உடனே பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் அறிவுசார் சொத்துடமை யாரும் வெளியிடக்கூடாது அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டி அறிவிப்பை வெளியிட்டார் திராவிடர் கழகத்தலைவர் வீ.ரமணி வீரமணியின் இந்த செயலைக் கண்டித்தும். பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று[5-08-2008] திங்கள்கிழ்மை நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார் ஆதித்தமிழர் பேரவையின் இளைஞரணிச் செயலாள்ர் நீலவேந்தன்,பெரியார்திராவிடர்கழக மாவட்டத்தலைவர் துரைசாமி,தென்மொழி துரையரசனார், அகிலன்,முகில்ராசு,சரவணமூர்த்தி,பல்லடம்விஜயன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

வலைப்பதிவு காப்பகம்